;
Athirady Tamil News

பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலடி..!!

0

கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 4 சவால்களை எழுப்பி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பெங்களூருவில் நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழல் அரசு என்று கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைத்தால், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான வசதிகள் செய்யும். நாட்டில் இருந்து காங்கிரஸ் கலாச்சாரம் ஒழிக்கப்படும் என ஆவேசமாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பேசி இருந்தார். பாரதிய ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா கொலை வழக்கில் சிறையில் இருந்தவர் என்றும், கர்நாடக மாநில பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பளராக அறிவிக்கப்பட்டு உள்ள எடியூரப்பாவும் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி ஊழல் குறித்து பேசும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் குறித்து பேசுவதற்கு முன், சில சவால்களை உங்களுக்கு வைக்கிறேன்.

1. ஊழல் குறித்து நீங்கள் பேசுவதற்கு முன் லோக்பால் அமைப்பை முதலில் அமையுங்கள்.

2. சொராபுதீன் கொலை வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

3. பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்துக்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது குறித்து விசாரியுங்கள்.

4. கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி வேட்பாளராக ஊழல் கறைபடியாத நபரை நியமியுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − seven =

*