;
Athirady Tamil News

சென்ட்ரலில் பொழுதுபோக்கு வசதியுடன்,பூமிக்கடியில் உருவாகும் மெட்ரோ ரெயில்நிலையம்..!!

0

சென்ட்ரலில் வணிக வளாகம், பொழுதுபோக்கு வசதியுடன் பூமிக்கடியில் உருவாகும் பிரம்மாண்ட மெட்ரோ ரெயில் நிலையம் இன்னும் 2 மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

சென்னை மாநகர, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும், மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங் கலம்-நேருபூங்கா வரையில் சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து சேவை தற்போது நடைபெற்று வருகிறது.

நேருபூங்கா-சென்ட்ரல் வரையிலான வழித்தட பாதையில் சுரங்கப் பணி தற்போது நிறைவடைந்துள்ளதையொட்டி அங்கு சோதனை ரெயில் ஓட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்ட்ரல் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் பிரம்மாண்ட 3 அடுக்கு மாடிகளுடன் ரெயில்நிலைய சதுக்கம் உருவாக்கப்படுகிறது. முதல் தளத்தில் டிக்கெட் கவுண்டர்கள், வணிக வளாகம், பொழுதுபோக்கு வசதியுடன் அமைக்கப்படுகிறது. 2-வது, மற்றும் 3-வது தளத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் எளிதில் செல்வதற்காக 62 படிக்கட்டுகள், 36 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படுகிறது. பூமிக்கடியில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நிலையமாக சென்ட்ரல் மெட்ரோ சுரங்க நிலையம் உருவாக்கப்படுகிறது. பயணிகளுக்காக நல்ல காற்றோட்ட வசதிகள், வெளிநாட்டு தரத்திலான கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படுகிறது. இன்னும் 2 மாதத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரெயில்நிலைய கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் 3 லட்சம் சதுர அடி பரப்பில் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அங்கு 3 அடுக்கு மாடியுடன் மெட்ரோ சதுக்கம் உருவாக்கப்படுகிறது. அதில் வணிகவளாகம், உணவகங்கள், பொழுது போக்கு வசதிகள் அமைக்கப்படுகிறது. ரெயில் நிலையத்திற்குள் செல்ல பயணிகளுக்காக 62 படிக்கட்டுகள், 36 எஸ்கலேட்டர் வசதிகள், 14 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படுகிறது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூங்கா மின்சார ரெயில் நிலையத்துக்கு செல்ல பயணிகளுக்காக நடைபாதை அமைக்கப்படுகிறது. சென்ட்ரல் மூர்மார்க்கெட் மின்சார ரெயில் நிலையத்துக்கு செல்லவும் தனிவழிப் பாதைகள் உருவாக்கப்படுகிறது.

பயணிகளுக்காக 5 நுழைவு வாயில்களும் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பயணிகள் வந்துசெல்லும் இடவசதியுடன் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 12 =

*