;
Athirady Tamil News

அண்ணனால் பிள்ளை பெற்றெடுத்த 11 வயது சிறுமி: அதிர்ச்சி சம்பவம்..!!

0

ஸ்பெயினில் தனது 14 வயது சகோதரனால் 11 வயதேயான சிறுமி ஆண் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் Murcia நகரில் அமைந்துள்ள Virgen de la Arrixaca மருத்துவமனையில் குறித்த சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது.

வயிற்றுவலியால் துடித்த சிறுமியை பெற்றோர் கடந்த வெள்ளியன்று மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் சிறுமி பிள்ளை பெற்றுள்ளார்.

இதனையடுத்து தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும், அவர்கள் வந்து மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியின் 14 வயது அண்ணனே குழந்தைக்கு தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.ஸ்பெயின் சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வயது சிறுவனுக்கு இல்லை என்பதால் பொலிசார் வழக்கு பதியாமல் விடுவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தாயாரும் பிள்ளையும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி கர்ப்பமாக இருப்பது அவரது பெற்றோருக்கு மட்டுமல்ல சிறுமிக்கும் தெரியாது என கூறப்படுகிறது.

வயிற்றுவலியால் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு இட்டுச் சென்ற பின்னரே சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கும் சிறுமிக்கும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே டி.என்.ஏ சோதனை மேற்கொண்டதில் குழ்னதையின் தந்தை 14 வயதான சகோதரன் என்பது தெரிய வந்தது.

மட்டுமின்றி சகோதரர்கள் இருவரும் பாலியல் உரவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு குடும்ப சூழல் உள்ளனவா என்பதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், சிறுவனே தமது சகோதரியுடன் உறவு கொண்டதற்காக எந்த ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் விசாரணை முடிவடைந்த பின்னரே முழு தகவலும் வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 19 =

*