;
Athirady Tamil News

பிரித்தானியாவுக்கு ஆயுதங்களுடன் வந்த இளைஞர்: விமானநிலையத்தில் கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்..!!

0

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஆயுதங்களுடன் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக, அந்த இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பிரித்தானியாவின் Ely பகுதியைச் சேர்ந்தவர் Ryan Sullivan(24). இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஆண்டு பல்கேரியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா சென்று திரும்பிய இவர் Cardiff விமானநிலையத்திற்கு வந்த போது, விமானநிலைய அதிகாரிகள் அவரின் லக்கேஜை சோதனை செய்துள்ளனர்.

அப்போது லக்கேஜில் பயங்கரமான ஆயுதங்களாக கருதப்படும் துப்பாக்கிகள், முகத்தில் குத்த பயன்படும் பொருட்கள் போன்றவைகள் என மொத்தம் 38 தடைசெய்யப்பட்ட பொருட்களை அந்த லக்கேஜில் வைத்து கொண்டு வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர் நான் அங்கு சென்று வந்ததற்கான ஞாபமாக இருக்கட்டும் என்று வாங்கி வந்ததாக கூறியிருந்தார்.

ஆனால் பொலிசார் இது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நீதிமனத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது நீதிபதியிடம் Ryan Sullivan லக்கேஜில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆதரமாக பொலிசார் காட்டியுள்ளனர்.

அதில் stun guns என்றழைக்கப்படும் மின்சாரம் துப்பாக்கி 8-ஐ காண்பித்துள்ளனர். அது சுமார் 5,000 வோல்டிலிருந்து சுமார் 8,000 வோல்ட் வரை மின்சாரத்தை கடத்தக் கூடியது.

இதை பொலிசார் மட்டுமே பயன்படுத்துவர். அதை இவர் வாங்கி வந்துள்ளார்.

அதைத் தவிர போன் வடிவில் இருக்கும் stun gun-கள் மற்றும் 13 CS Gas என்றழைக்கப்படும் கண்ணீர் புகை சிலிண்டர்கள் போன்றவைகள் இருந்துள்ளன. இதில் CS Gas-ஐ பயன்படுத்தினால் வாந்தி, சீத பேதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

9 knuckle dusters,ஆபத்தை விளைவிக்க கூடிய 6 இரும்பு ராடுகள் என மொத்தம் 38 பொருட்களையும் அங்கு சம்ர்பித்துள்ளனர்.

நீதிபதி இது குறித்து Ryan Sullivan-யிடம் கேட்ட போது முன்பு சொன்ன பதிலான நான் அங்கு சென்று வந்ததற்கான ஞாபமாக இருக்கட்டும் என்று வாங்கி வந்ததாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதி இது ஒரு முட்டாள்தனமான செயல், அதுமட்டுமின்றி இத்தனை பொருட்களை எல்லாம் பார்க்கும் போது ஞாபகார்த்திற்கு வாங்கி வந்ததாக தெரியவில்லை, அந்த பொருட்களை இங்க இருக்கும் மக்களுக்கு விற்க கொண்டு வந்தது போல் தெரிகிறது.

இது எல்லாம் மிகவும் ஆபத்தானவை என்று கூறி, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டதுடன், அவன் கொண்டு வந்த பொருட்களை அழித்துவிடுங்கள் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் Ryan Sullivan கொண்டு வந்த அனைத்து பொருட்களும் பல்கேரியாவில் தடை செய்யப்படாத பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =

*