;
Athirady Tamil News

மலச்சிக்கல் தான்! படுக்கையிலேயே சடலமாய் கிடந்த 17 வயது சிறுவன்: நடந்தது என்ன?..!!

0

பிரித்தானியாவில் வயிற்றுவலியால் துடித்த சிறுவனுக்கு மலச்சிக்கலுக்கான மருந்துகளை கொடுத்து மருத்துவமனை அனுப்பிய நிலையில் சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளார்.

தெற்கு வேல்ஸை சேர்ந்தவர் கீரோன், இவரின் மகன் ஜாக் டுன்னுக்கு (17) சில தினங்களுக்கு முன்னர் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

வலியால் துடித்த ஜாக் உடனடியாக ராயல் கிளாமோர்கன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான மலச்சிக்கலால் ஜாக் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான மருந்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இரவு நன்றாக தூங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர், பின்னர் ஜாக் வீட்டுக்கு சென்று தூங்கிய நிலையில் படுக்கையிலேயே மரணமடைந்துள்ளார்.

அடுத்தநாள் காலையில் தான் இதை கீரோன் கண்டுப்பிடித்துள்ளார்.பிரேத பரிசோதனையில் ketoacidosis பிரச்சனையால் ஜாக் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ரத்தத்தில் அமிலத்தை உருவாக்குதலுக்கு தான் ketoacidosis என பெயராகும்.

இது குறித்து ஜாக்கின் தந்தை கீரோன் கூறுகையில், மருத்துவமனையில் ஜாக் மூச்சு விட சிரமப்பட்டான். ஆனால் பதட்டம் காரணமாக அவன் சிரமப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

ஜாக்கின் பிரச்சனையை மருத்துவர்கள் சரியாக கண்டுப்பிடிக்கவில்லை.சரியான மற்றும் எளிமையான சில பரிசோதனைகள் செய்திருந்தால் அவன் மரணத்தை தடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்.

படுக்கையில் ஜாக் சடலமாக கிடந்ததை பார்த்தது என் வாழ்க்கையின் மிக மோசமான தருணம் என சோகத்துடன் கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + one =

*