;
Athirady Tamil News

பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள் நாளை; விஷேட போக்குவரத்து திட்டம்…!!

0

காலஞ்சென்ற பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் தேகம் நாளை பகல் 01.00 மணிக்கு பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து 120 பஸ் வீதியூடாக ரத்னபிட்டிய சந்திக்கு வந்து அங்கிருந்து பல்கலைக்கழக மாவத்தை ஊடாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் விஷேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

நாளை பகல் 12.30 மணியளவில் மஹரகம – தெஹிவளை வீதியின் பெல்லந்தரை சந்தியில் இருந்து பொரலஸ்கமுவ நோக்கிய வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

தேகம் அடங்கிய வாகனப் பேரணி பொரலஸ்கமுவ சந்தியில் இருந்து 120 பஸ் வீதியூடாக ரத்னபிட்டிய சந்தி நோக்கி செல்லும் போது, 120 வீதியின் கொழும்பில் இருந்து வௌியேறும் திசை இரு வழிப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 120 பஸ் வீதியின் பொரலஸ்கமுவ சந்தி மற்றும் பெபிலியான சந்தியில் இருந்து வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

ஆகவே குறித்த நேரங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 9 =

*