;
Athirady Tamil News

தமிழ் மக்களுக்கான புதியதோர் வரலாற்றை நாம் உருவாக்குவோம், முருகேசு சந்திரகுமார் தெரிவிப்பு..!! (படங்கள்)

0

தமிழ் மக்களுக்கான புதியதோர் வரலாற்றை நாம் உருவாக்குவோம். வரலாறு முழுவதும் தோற்றுக் கொண்டிருக்கிறோம். ஏமாற்றப்படுகிறோம் என்ற நிலையை மாற்றியமைப்போம்.

படிப்பினைகளின் அடிப்படையில் புதிய அரசியல் வழிமுறையில் பயணித்து எமது மக்களுக்கான வெற்றிகளைப் பெறுவோம். இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய எமது அரசியல் வியூகங்களை வகுத்து எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்போம்.

எமது இனத்தனித்துவத்தை நிலைநாட்டும் வகையில் எமது வாழ்வையும் வரலாற்றையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வெற்றியைப் படைப்போம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் மக்களுக்கான அபிவிருத்தியையும் சமாந்தரமாக வென்றெடுப்பதே எமது நோக்காகும்.

எமது இந்த அரசியல் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணியெனத்திரண்டிருக்கிறார்கள். தமிழ்க்கட்சிகளின் குழப்பம் நிறைந்த அரசியலை விட்டு புதியதொரு அரசியல் தெரிவை நோக்கி மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதனுடைய அடையாளமாக எமது வெற்றி அமையப்போகிறது என சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தற் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கரைச்சி பச்சிலைப்பள்ளிஇ பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் கேடயம் சின்னத்தில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது

கிளிநொச்சி மாவட்டம் போரினால் முழுதாகவே அழிந்த மாவட்டமாகும். இங்கே உள்ள மக்கள் அனைவரும் யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். மீள் குடியேற்றத்திற்குப் பிறகு கிளிநொச்சி மாவட்டத்தை முடிந்த அளவுக்கு மீள் நிலைப்படுத்திக் கட்டியெழுப்புவதற்காக மக்களுடன் இணைந்து கடந்த காலத்தில் பாடுபட்டிருக்கிறோம்.

வடக்குக் கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை முன்னிலை மாவட்டமாகக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதேவேளை எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் இலட்சியத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்திலும் நாம் விட்டுக் கொடுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகிறோம்.

அண்மைக்காலத்தில் மக்கள் அரசியல் ரீதியாகக் குழப்பங்களுககுள்ளாகியுள்ளனர். அரசியல் தீர்வின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல தரப்பினரும் வெவ்வேறு விதமாகப் பேசி வருவதால் மக்கள் குழப்படைந்துள்ளனர். இந்தக் குழப்பமான நிலையை நாம் எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம். போராட்டத்தில் பெரும் தியாகங்களைச் செய்த எமது மக்கள் இன்று இவ்வாறான குழப்பங்களுக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழ் அரசியல் தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் நிறைவேற்றவில்லை. இந்தக் கோபம் இன்று மக்களுககு ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் புதிய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்கள்.

நாஙகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து புதியதொரு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இந்தப் பயணத்திற்கான அங்கீகாரத்தை மக்கள் எமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் எப்போதும் செயலே சிறந்த அரசியல் வழிமுறை என நம்புகிறோம். இதையே எமது அரசியல் நடைமுறையாகவும் பின்பற்றி வருகிறோம்.

மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவை நாம் மக்களுக்கான வெற்றியாகவே பரிசளிப்போம். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவோம். கரைச்சிஇ பச்சிலைப்பள்ளி பூனகரி ஆகிய பிரதேச சபைகளின் மூலமாக எமது பிரதேசத்தைஇ எமது மாவட்டத்தை சிறப்புற உருவாக்குவோம். எமது மாவட்டத்தை அபிவிருத்தியினால் கட்டியெழுப்புவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் உங்களின் முன்னிலையில் சத்தியவாக்காகத் தருகிறோம்.

எமது அரசியல் பயணத்துக்கு உங்களுடைய முழுமையான ஆதரவை வேண்டி நிற்கிறோம் என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

sdr
You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 16 =

*