;
Athirady Tamil News

மகனின் சடலம் இல்லாமல் வெறும் சவப்பெட்டியை புதைத்த தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

0

பிரித்தானியாவில் மகனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும் ஆய்வாளர் தர மறுத்ததால் வெறும் சவப்பெட்டியை புதைக்கும் நிலைக்கு தாய் தள்ளப்பட்டுள்ளார்.

வேரன் உல்யெட் (28) என்ற இளைஞர் கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் திகதி காணாமல் போன நிலையில் பிரான்ஸின் கலே நகரில் உள்ள கடற்கரைக்கு அருகில் கடந்த மாதம் 12-ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

வேரனின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வேரனின் இறுதி சடங்கை செய்ய முடிவெடுத்த அவரின் தாய் ராணி உல்யெட் இது குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக வேரனின் சடலத்தை கொடுக்க பிரேத பரிசோதனை செய்யும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

பல் பதிவுகள் மூலம் அந்த சடலமானது வேரனுடையது தானா என ஆய்வாளர் சோதித்த போது அது தோல்வியடைந்துள்ளது.

இதனால் சடலம் வேரனுடையது என தெரியும் வரை அதை கொடுக்க முடியாது என ராணியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்ய முடியாது என சுடுகாடு உரிமையாளர் கூறிவிட்டதால் வெறும் சவப்பெட்டியை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராணி புதைக்கும் நிலைக்கு ராணி தள்ளப்பட்டார்.

இது அங்கிருந்த உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து ராணி கூறுகையில், கடைசி நேரத்தில் சடலத்தை கொடுக்க முடியாது என பிரேத ஆய்வாளர் கூறுவார் என நான் நினைக்கவில்லை.

இது என்னையும் எனது உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. என் மகன் கடந்த 12-ஆம் திகதி இறந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள், ஆனால் அதற்கு முன்னரே அவன் இறந்திருக்கலாம் என தான் கருதுவதாக கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + seven =

*