குடியுரிமை பெற்று தருகிறேன்: பணம் வாங்கி கொண்டு ஆறு பெண்களை மணந்த நபர்..!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஆறு ஆப்பிரிக்க பெண்களை அவர்களுக்கு நாட்டில் சட்டபூர்வ குடியுரிமை வாங்கி தரும் நோக்கில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ் (58), இவர் கடந்த 2003-லிருந்து 2013 ஆண்டு காலக்கட்டம் வரை க்ரேஸ் முயிறு, லுசி மார்சாரியா, நபிஷா அப்துல் சலாம், ஏஞ்சலா சாம்பி, நான்சி வவீறு மற்றும் ஜோஸ்பின் ஆக்வா ஆகிய ஆறு ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குடிவரவு சட்டங்களை மீறவும், குறித்த பெண்களுக்கு அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை வாங்கி தரும் நோக்கிலேயே பீட்டர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த உதவியை செய்ய அதிகளவில் பீட்டர் பணமும் வாங்கியுள்ளார், இந்நிலையில் கடைசியாக திருமணம் செய்த ஜோஸ்பினுக்கு நிரந்தர குடியுரிமை கோரி பீட்டர் 2013-ல் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என அதிகாரி கண்டுப்பிடித்துள்ளார், இதையடுத்து அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் பீட்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆறு பெண்களை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.மேலும், தனது நான்கு மனைவிகளுக்கு பீட்டர் குடியேற்ற நலன்களை பெற்று தந்துள்ளதும் தெரியவந்தது.
ஆனால் அப்போது அவரை அதிகாரிகள் விட்டுவிட்ட நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தற்போது கைது செய்துள்ளனர்.
இது ஏன் என்பதற்கான காரணமும், பீட்டர் திருமணம் செய்த பெண்கள் தற்போது எங்குள்ளார்கள் என்ற விபரமும் தெரியவில்லை.