;
Athirady Tamil News

நானுஓயாவில் கடும் காற்று: மூன்று தொழிலாளர்களின் வீடுகள் சேதம்..!! (படங்கள்)

0

நானுஓயா – கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள மூன்று தொழிலாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேரும், தோட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*