;
Athirady Tamil News

மாணவர்களுக்கான “ கற்றல் திறன்களுக்கான செயலேடு “ வெளியீட்டு நிகழ்வு..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் தரம் ஐந்து மாணவர்களுக்கான “ கற்றல் திறன்களுக்கான செயலேடு “ எனும் தலைப்பிலான செயலேடு வெளியீட்டு நிகழ்வு (06) மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் தொகுப்பில் 2018 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இந்த செயலேடு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

இந்த செயலேடு வெளியிட்டு நிகழ்வில் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ் .மனோகரன் மட்டக்களப்பு ,மட்டக்களப்பு கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ் .கங்கேஸ்வரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல் ) ஹைதரலி மற்றும் கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர் .

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − two =

*