;
Athirady Tamil News

வவுனியாவில் காப்புறுதி முகவர் நூதன முறையில் பணம் மோசடி…!!

0

வவுனியாவில் காப்புறுதி முகவர் நூதன முறையில் பணம் மோசடி! பெலிஸ் நியைத்தில் முறைப்பாடு.

வவுனியாவில் வர்த்தகருக்கு ஆயுட்காப்புறுதி செய்து தருவதாக தெரிவித்து பெருமளவான பணத்தை காப்புறுதி முகவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் பிரபல்யமான புடவைக்கடை வியாபாரம் மேற்கொண்டு வரும் வர்த்தகர் ஒருவரிடம் பிரபல்யமான காப்புறுதி நிறுவனத்தின் முகவர் ஒருவர் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு ஆயூட்காப்புறுதி பெற்றுத்தருவதாக கூறி ஆறு இலட்சம் ரூபா பணத்தை நூதன முறையில் மோசடி செய்துள்ளார்.
ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டால் பல அனுகூலங்களுடன்; பில்லியன் கணக்கில் காப்புறுதி பணத்தை பெறமுடியும் என்று தெரிவித்து வர்த்தகரை மூளைச்சலவை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த வர்த்தகரும் மனைவியின் பெயரில் ஆறு இலட்சம் ரூபாவிற்கு நிரந்தர வைப்பு காப்புறுதி ஒன்றினைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டு இலட்சம் ரூபாவாக அப்பணத்தை மூன்றாகப் பிரித்து தவணைமுறையில் செலுத்தியுள்ளார். இதையடுத்து சில தினங்களின் காப்புறுதி முகவரால் வர்த்தகருக்கு காப்புறுதிப் புத்தகம் 21-12-2008 ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்புறுதியானது 2023 வரை செய்யப்பட்டுள்ள நிலையில் பணத் தேவையின் நிமித்தம் காப்புறுதி பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த காப்புறுதி நிறுவனத்த்தை அணுகியுள்ளார். வர்த்தகரின் ஆறு இலட்சம் ரூபா பணம் காப்புறுதி நிறுவனத்தில் வைப்புச் செய்யப்படவில்லை என காப்புறுதி நிறுவனம் கையை விரித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட முகவர் தற்போது காப்புறுதி நிறுவனத்தில் பணியில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த வர்த்தகர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் வவுனியா வர்த்தகர் சங்கம் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளருக்கும் இம் மோசடி குறித்து கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − fourteen =

*