;
Athirady Tamil News

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்; இரு கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்…!!

0

கடந்த 2008ம் ஆண்டு கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 02 கடற்படை வீரர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை – நீதவான் லங்கா ஜெயரத்ன சந்தேகநபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கடற்படையின் கமாண்டர் பிரியாத் ஹெட்டியாரச்சி என்பவருக்கு வெளிநாடு செல்லவும் தடை வித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை விலக்கிக் கொள்ள உத்தரவிடுமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி தீர்ப்பளிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + six =

*