;
Athirady Tamil News

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கிளிநொச்சியில் கைது..!!

0

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம், மன்னார்,யாழ்ப்பாணம் வவுனியா பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புங்குடுதீவை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையை 06.02.2018 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வவுனியாவில் கொள்ளையடிக்கப்பட்ட மூன்று இலட்சம் பெறுமதியான ஒரு தொகை தங்கமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள நகை கடையொன்றில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றதையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டடையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேக நபரை கிளிநொச்சி ஜெயபுரத்தில் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்நபர் யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றிற்காக யாழ் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது தப்பித்து சென்றிருந்ததுடன் யாழ் நீதி மன்றத்தால் குறித்த நபருக்கு எதிராக 07 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

இவ்வாறு தப்பித்து சென்ற நபர் மன்னார், செட்டிக்குளம், கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் 04 மாதமாக பொலிஸாரின் தீவிர தேடுதலின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு கொள்ளைச்சம்பவத்தில் குறித்த நபர் இரண்டு வருடகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*