;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு…!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 225 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், 542 சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் இலிகிதர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளதுடன் வாக்கெண்ணும் நிலையங்களில் தேவைக்கேற்ப பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் தொடர்புடைய தேர்தல் வழங்கல் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fifteen =

*