;
Athirady Tamil News

திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்: பிரதமர் மோடி..!!

0

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. சார்பில் 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, திரிபுரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர் என மாநில பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரிபுரா மாநிலம் சோனமுரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்த தேர்தல் மூலம் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் நிச்சயம் பாடுபடுவோம். எனவே எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்.

திரிபுரா மாநிலம் புதிய உயரத்தை தொட விரும்புகிறது. சிறந்த வாய்ப்பு மற்றும் வேலையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முறைகேடுகள் திரிபுரா மாநிலத்தை சீரழித்துள்ளது. ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வர்த்தகம், சுற்றுலா இளைஞர்களுக்கு பயிற்சி ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதன்மூலம் இளைஞர்கள் இன்னும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மோடி வருகையையொட்டி திரிபுராவின் சர்வதேச எல்லை பகுதி சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதியில் பி.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + four =

*