;
Athirady Tamil News

புற்றுநோயால் அவதிக்குள்ளான பிரித்தானிய தாயார்… கைவிட்ட மருத்துவமனை: காப்பாற்றிய டைட்டானிக் ஜோடி..!!

0

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய தாயார் ஒருவரை மருத்துவமனை கைவிட்ட நிலையில் பிரபல டைட்டானிக் ஜோடி காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gemma Nuttall என்ற பிரித்தானிய தாயார் தமது முதல் குழந்தையை கருவுற்றிருக்கும்போது மருத்துவர்கள் அந்த அதிர்ச்சி தகவலை அவரிடம் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு கருப்பை புற்றுநோய் தீவிர கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனே போதிய மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் உயிர்காக்கும் மருந்துகளை தற்போதைய நிலையில் எடுத்துக் கொண்டால் அதன் தாக்கத்தால் தமது குழந்தைக்கு அது ஆபத்தை வரவழைக்கும் என அஞ்சிய ஜெம்மா மருந்துகளை தவிர்த்தார்.

இதனிடையே 2014, மார்ச் 24 ஆம் திகதி அவருக்கு Penelope என்ற மகள் ஆரோக்கியத்துடன் பிறந்தார். இருப்பினும் ஜெம்மா மிகவும் கவலைக்கிடமான கட்டத்துக்கு தள்ளப்பட்டார்.

NHS நிர்வாகம் ஜெம்மாவின் உயிரை காக்க முடியாது என கைவிரித்துள்ளது. அதிகபட்சம் 6-ல் இருந்து 12 மாதங்களே உயிர் வாழ முடியும் எனவும் ஜெம்மாவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மன தளராத ஜெம்மா, தனது சிகிச்சைக்காக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து நிதி திரட்டி வந்துள்ளார்.

ஜெம்மா மேற்கொண்ட சிகிச்சை மற்றும் திடமான நம்பிக்கையால் கருப்பை புற்றுநோய் முற்றாக குணமடைந்து ஓராண்டுகாலம் வேலைக்கு போகும் அளவுக்கு நலம் பெற்றார்.

ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் ஜெம்மாவை உலுக்கியது. அவரது தலையில் 4-வது நிலையில் இருக்கும் புற்றுநோய் தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மூளை அறுவைசிகிச்சை மேற்கொண்ட ஜெம்மா, புற்றுநோய் கட்டிகளை அகற்றவும், தொடர்ந்து ரேடியோதெரபி சிகிச்சைக்கு மாறினார்.

இந்த நிலையில் ஜெம்மாவின் நிலையை கேள்வியுற்ற டைட்டானிக் பட நடிகை கேட் வின்ஸ்லெட் சிகிச்சைக்காக சுமார் 300,000 பவுண்ட் தொகையை சேகரித்து தருவதாக உறுதி அளித்தார்.

அவரும் டைட்டானிக் பட நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் சுமார் 1.35 மில்லியன் டொலர் திரட்டியுள்ளனர்.

தொடர்ந்து ஜேர்மனியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெம்மா தற்போது புற்றுநோயின் பிடியில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளார்.இருப்பினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்துவருவதாகவும் ஜெம்மா தெரிவித்துள்ளார்.

தமது மகளை புற்றுநோயின் கோரபிடியில் இருந்து காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜெம்மாவின் தாயார், டைட்டானிக் ஜோடி கேட் மற்றும் லியோவுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*