;
Athirady Tamil News

போலி வாக்குச் சீட்டுக்கள் சிக்கின…!!

0

குருநாகல் – வெஹர பகுதியில் அச்சிடப்பட்டு கொண்டிருந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளும் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில் , வாக்களிப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கோ மது போதையில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்களை அழைத்துச் செல்லும் வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் மொத்தமாக 65 ஆயிரத்து 758 காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.அவர்களில் 26 ஆயிரத்து 480 பேர் வாக்குச் சாவடிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அவர்களுக்கு மேலதிகமாக தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு இடையில் நடமாடும் காவற்துறை சேவையும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட ரீதியாக 140 கலகம் அடக்கும் காவற்துறை பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eight =

*