;
Athirady Tamil News

கம்பஹா துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய உந்துருளி சிக்கியது..!!

0

கம்பஹா நெதகமுவ போகஸ்கஹ பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகத்துக்குரியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

வெயாங்கொடை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகிலிருந்து குறித்த உந்துருளி கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த உந்துருளியின் இலக்கத் தகடு ஊடாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட செயலணியின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் ஒன்றின் காரணமாக, கடந்த 4ஆம் திகதி குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கம்பஹா நெதகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சமிந்த எனப்படும் சமி என்பவர் அதில் கொல்லப்பட்டார்.

அவர், பஸ் பொட்டா எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய உதவியாளர் என காவல்துறையினர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி….

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − sixteen =

*