;
Athirady Tamil News

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்குபெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டது..!! (படங்கள் & வீடியோ)

0

வவுனியா மாவட்டத்தின் 148 வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் இன்று (09) காலை 8..00 மணி தொடக்கம் நடைபெற்று நடைபெறுகிறது.

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்கு பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வவுனியா நகரசபை.தெற்கு தமிழ் பிரதேச சபை, தெற்கு சிங்கள பிரதேச சபை, வெண்கல செட்டிக்குளம் பிரதேச சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 103 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படவிருக்கும் நிலையில் 1500 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*