;
Athirady Tamil News

கிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி..!!

0

கிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி, – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு வட்டாரத்தில் நேரடியாகவும், பட்டியலூடாகவும் 66 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 638 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான அனைதது ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் 1500 அரச உத்தியோகத்தர்களும், 300 காவல்துறையினரும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் தோ்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

வேட்பு மணுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்றுவரை(09) 71 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டால் முறைபாடு செய்வதற்கும் விசேட மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொலைபேசி இலக்கமான 0213900154 க்கு தொடர்பை ஏற்படுத்தி முறைபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அவர்

வாக்களார்கள் முடியுமானவரை காலையிலேயே சென்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*