;
Athirady Tamil News

மயிலுடன் பறப்பதற்கு விமானநிலையம் வந்த பெண்: தடை விதித்ததால் எடுத்த அதிரடி முடிவு..!! (வீடியோ)

0

விமானத்தில் மயில் அழைத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதால், அந்த மயிலின் உரிமையாளர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள Newark Liberty சர்வதேச விமானநிலையத்திற்கு புகைப்பட கலைஞரான Ventiko தன்னுடைய Dexter என்ற மயிலை விமானநிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அவர் அங்கிருந்து Los Angeles செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் தன் மயிலுடன் செல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

ஆனால் United Airlines நிறுவனமோ மயிலை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளது.

ஏனெனில் அதன் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக United Airlines இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் Ventiko சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக மயிலை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த போதும், United Airlines நிறுவனம் உத்திரவாதம் இல்லாத காரணத்தினால் மறுத்துள்ளது.

இறுதியாக ஆத்திரமடைந்த Ventiko விமானத்தில் செல்வதற்கு பதில் காரில் செல்வதே மேல் என்று அதிரடி முடிவெடுத்து மயிலுடன் காரில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் Ventiko இதற்கு முன்னர் United Airlines நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தன்னுடைய மயிலைப் பற்றி கூறியதாகவும், நாங்கள் சுமார் மூன்று முறை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்று தெரிவித்திருந்ததாகவும் United Airlines நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 11 =

*