;
Athirady Tamil News

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் தேங்காய் உடைத்து விஷேட பிரார்த்தனை…!! (படங்கள்)

0

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் இன்று 351ஆவது நாட்களாக தமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இன்று அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு உறவுகளின் கோரிக்கையினை நிராகரிக்கப்பட்டு ஒருவருடமாவதையிட்டு இன்று காலை முதல் அடையாள உணவு தவிர்ப்பை மேற்கொண்டு நாளையுடன் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவடைந்து சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இன்று பிற்பகல் 12.30மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்ற காணாமற்போன உறவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் காணாமற்போன உறவுகள் எவரும் தங்களிடம் இல்லை அவர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை வெளிப்படுத்தக்கோரியும் கந்தசாமி ஆலயத்தில் விஷேட பிரார்த்தனையும், தேங்காய் உடைத்து தமது உறவுகளை வெளிப்படுத்தக்கோரியும் ஆலய வளவில் கண்ணீர்விட்டு கதறியழுததைக்காணக்கூடியதாக இருந்தது.

எமது கண்ணீரை வெளிநாடுகள் வந்து பார்க்கவேண்டும். வயதுபோன தாய்மார்கள் பல நாட்களாக உணவு தவிர்ப்பு மேடையிலிருந்து கதறியழுவது உங்களுடைய காதுகளில் கேட்கவில்லையா? ஜரோப்பிய ஒன்றியம் உடனடியாக வந்து இறங்கி எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடவேண்டும்.

முருகனும் வேல் எடுத்து போராட்டம் மேற்கொண்டவனே நீதான் முடிவு எடுக்கவேண்டும் எனவும் கதறியழுதனர்கள். என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 9 =

*