;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன…!! (படங்கள் & வீடியோ)

0

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலைய மூத்த பொறுப்பதிகாரி தலைமையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என 17 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. 243 வட்டாரங்களில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளைக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. வாக்கு எண்ணும் பணிகள் அந்த அந்த வட்டாரத்திலேயே மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*