;
Athirady Tamil News

பார்வையற்ற சிறுமியை கற்பழித்துக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை..!!

0

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் உள்ள காலிக்கா நுப்பாடா கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற சிறுமி அம்மாநில தலைநகரான புவனேஸ்வர் நகரில் உள்ள அரசுa பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வந்தார்.

இந்நிலையில், அந்த சிறுமியின் குடும்பத்துக்கு அறிமுகமான பானமாலி பாரிக் என்ற டாக்சி டிரைவர் கடந்த 5-6-2013 அன்று அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றார். அந்தப் பெண்ணை கற்பழித்ததுடன் இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தி விடுவாள் என்ற பயத்தில் அவளை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த கொடூர சம்பவம் அப்போது ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என பரவலான போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, டாக்சி டிரைவர் பானமாலி பாரிக் என்பவரை கைது செய்த போலீசார் அவர்மீது பூரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுபதர்ஷி பட்நாயக் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமியை கொன்ற குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், கற்பழிப்பு குற்றத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இளம்சிறாருக்கு எதிரான குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தின்படி, சிறுமியை கடத்திய குற்றத்துக்கு தனியாக ஐநாண்டுகள் சிறை தண்டனையும், கொலை குற்றத்துக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 10 =

*