;
Athirady Tamil News

கல்வியில் பெண்கள் ‘டாப்’ ஆனாலும் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட இல்லை..!!

0

இயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தற்போது தேர்தல் அணல் வீசி வருகின்றது. வரும் 27-ம் தேதி இங்கு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் இம்மாநிலத்திற்கு அரசியல் சாசனம் சில சிறப்பு அந்தஸ்துகளை வழங்கியுள்ளது. அதன்படி, இங்குள்ள அனைத்து மக்களுமே பாதுகாக்கப்பட்டவர்கள்.

1963-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான நாகாலாந்துவில் இது வரை ஒரு பெண் கூட தேர்தலில் வென்று சட்டசபைக்கு சென்றது இல்லை. அப்போது முதல் நேற்று வரை வெறும் 30 பெண்கள்தான் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்பதே சோகம் தரும் செய்திதான்.

அத்தி பூத்தது போல 1977-ம் ஆண்டு ரானோ எம் ஸ்ஹாயிசா என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அதோடு, சரி அங்கு பெண் எம்.பி.யும் இதுவரை தேர்வானது இல்லை. இத்தனைக்கும் அங்குள்ள பெண்கள் படிப்பறிவு அற்றவர்கள் அல்ல. இந்தியாவின் பெண் கல்வி விகிதமே 65 சதவிகிதம் என்று இருக்கும் நிலையில், நாகலாந்தில் அது 76 சதவிகிதமாக உள்ளது. தனியார், மற்றும் அரசுத்துறையில் பெண்கள் கனிசமான அளவில் உள்ளனர்.

பா.ஜ.க பெண் வேட்பாளர் ராஹிலா

கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்ட நிலையில், இம்முறை சற்றே முன்னேற்றமாக 5 பெண்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். பா.ஜ.க – தேசியவாத ஜனநாயக முன்னணி கட்சி கூட்டணி சார்பில் 4 பெண்களும், ஒரு பெண் சுயேட்சையாகவும் களமிறங்குகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்கள் நிறுத்தப்படவில்லை. தகுதியான பெண்களை தேடி கிடைக்கவில்லை என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். “போன முறை 800 ஓட்டுகளில் தோற்றேன். மற்ற கட்சிகளை போல இல்லாமல் பா.ஜ.க எனக்கு சீட் வழங்கியுள்ளது. இம்முறை நிச்சயம் வெற்றிதான்” என பா.ஜ.க வேட்பாளர் ராஹிலா உற்சாகமாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + six =

*