வவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…!! (படங்கள் & வீடியோ)

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியாக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்
வாக்குகளை எண்ணுவதற்காக 56 கொத்தணி நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் முப்படையிரையும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….



