;
Athirady Tamil News

தேர்தல் கடமைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் சாரதிகள் வாக்களிக்க முடியாத நிலை..!!

0

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களின் சாரதிகள் வாக்களிக்க மடீயாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக தனியார் வாகனங்கள் பல வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த வாகனங்களின் சாரதிகள் கடமையில் இருந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் வாக்களிக்க முடியாதுள்ளனர்.

தமது வாக்களிப்பு நிலையங்களில் இருந்து தூர பிரதேசங்களுக்கு வாகனங்களில் கடமைக்கு சென்றுள்ளமையால் வாக்களிக்கமுடியாத நிலைஉள்ளதாகவும் அரச அதிகாரிகள் தம்மை வாக்களிக்க செல்ல அனுமதிக்கா மறுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + seven =

*