;
Athirady Tamil News

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது..!! (படங்கள்)

0

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (10) காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தமை மற்றும் வீதிகளில் தமது கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் ஆதரவாளர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன், கோவில் குளம் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள தேநீர் கடையில் கூடியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பொலிசார் ஆகியோரினால் வெளியேற்றப்பட்டதுடன் குறித்த கடையை உடனடியாக மூடுமாறு கடை உரிமையாளருக்கு பொலிசார் உத்தரவிட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 18 =

*