;
Athirady Tamil News

வவுனியாவின் மதியம் ஒரு மணிவரை 50 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளது..!!

0

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் மதியம் ஒரு மணி வரையில் 50 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

ஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. பாரிய தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகவில்லை.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வாக்குகளை எண்ணுவதற்காக 56 கொத்தணி நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவிருப்பதுடன் இரவு 8.00 மணி தொடக்கம் முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் வட்டார அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் பின் சபைகளுக்குரிய முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*