புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் பிடித்து சிக்கிக் கொண்ட இருவர்…!!

கண்டி, பூஜாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வக்கெடுப்பு நிலையத்தில் புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாக்குச்சாவடியின் பிரதானியால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
இதுதவிர புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த மற்றொரு நபர் அளுத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 14ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்தேகநபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்தில், உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்… (அறிவித்தல்)