;
Athirady Tamil News

பிற்பகல் 02 மணி வரையான வாக்களிப்பு நிலவரங்கள்…!!

0

நாடு பூராகவும் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் இன்று பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு நிலவரப்படி ,

களுத்துறை, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் 55% வாக்குப் பதிவும், கம்பஹா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, குருணாகல், மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் 69% வாக்குப் பதிவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும், பொலன்றுவை மாவட்டத்தில் 63% வாக்குப் பதிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 60%வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, கண்டி மாவட்டத்தில் 52% வாக்குப் பதிவும், பதுளை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், காலி மாவட்டத்தில் 67% வாக்குப் பதிவும், நுவரெலிய மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 10 =

*