;
Athirady Tamil News

பெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை..!!

0

இந்தியாவின் முன்னணி சுற்றுலா தலமாக கோவா மாநிலம் உள்ளது. அங்குள்ள கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு குற்ற செயல்களும் அதிகமாக நடைபெறும். போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை மருந்து பயன்படுத்திய 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பெண்கள் பீர் குடிப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்று கோவா முதல் – மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மனோகர், ‘ மாநிலத்தில் போதைப்பழக்கம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது எனக்கு பயம் வர தொடங்கி விட்டது. ஏனென்றால் பெண்கள் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இது சகிப்பு தன்மை வரம்பை கடந்து விட்டது. பெண்கள் மது குடிப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. நான் ஒவ்வொருவரையும் சொல்லவில்லை. இங்கு அமர்ந்து இருப்பவர்கள் பற்றியும் பேசவில்லை. பீர் குடிக்கும் பெண்கள் பற்றிதான் கவலைப்படுகிறேன்’.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + four =

*