;
Athirady Tamil News

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி..!!

0

பெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் அலுவலக நேரத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதிலும் கூட்ட நெரிசல் இருப்பதால் தற்போது கூடுதலாக மேலும் 3 பெட்டிகள் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 1500 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.

அடுத்த மாதம் (மார்ச்) முதல் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு ஜூன் மாதம் முதல் பெங்களூரு மெட்ரோ சார்பில் ஓடும் 50 மெட்ரோ ரெயில்களிலும் கூடுதலாக தலா 3 பெட்டிகள் இணைக்கப்படும்.

முதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கும் பையப்பனஹள்ளி – நாயண்ட அள்ளி ரெயில்வே தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதில் தனியாக ஒரு பெட்டி பெண்களுக்காக மட்டும் ஒதுக்கப்படும். பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + eighteen =

*