;
Athirady Tamil News

முதல் முறையாக அம்மாவின் குரல் கேட்ட குழந்தை..!!

0

பிறந்தது முதல் பெற்றோரின் குரலையே கேட்டறியாத குழந்தை, முதல் முறையாக அம்மாவின் குரல் கேட்டு சிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரின் மனங்களைக் கொள்ளை கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் பிறந்த குட்டிப்பாப்பா Blake-குக்கு பிறந்தது முதல் காது கேட்காது.

பிறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் காது கேட்க உதவும் கருவி ஒன்று பொருத்தப்பட்டது.

சிணுங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தை காதில் அந்தக் கருவி பொருத்தப்பட்டதும் திடீரென்று அமைதியாகி விடுகிறான்.

அவன் தாய், “ஹாய், அம்மா பேசுவது உனக்குக் கேட்கிறதா? ஐ லவ் யூ” என்று சொல்ல அம்மாவையே உற்றுப் பார்க்கிறான். அவன் கண் சிமிட்டுவது ஆம் என்பது போலவே இருக்கிறது.செல்லமாக அம்மா அவனது மூக்கைத் தொட, அந்தக் குழந்தை சிரிக்கும் சிரிப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

மருத்துவர் அடுத்த காதில் கருவியை மாட்ட அவனது அப்பா “ஹாய் பிக் பாய்” என்கிறார். அப்பாவையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வீடியோ நம் கண் முன்னிருந்து மறைகிறது. ஆனால் வெகு நேரத்திற்கு அந்தக் குட்டிப் புன்னகை நம் உள்ளத்திலேயே தங்கி விடுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 17 =

*