;
Athirady Tamil News

5 வயது சிறுமியின் முகத்தில் நெருப்பு மூட்டிய கொடூரம்: அதிர்ச்சி காரணம்..!!

0

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பேய் ஓட்டுவதாக கூறி 5 வயது சிறுமியை கயிறால் பிணைத்து வைத்து நெருப்பு மூட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் Peggy LaBossiere(51) மற்றும் Rachel Hilaire(40) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹைத்திய வம்சாவளியினரான சிறுமியின் தாயார் தமது மகளுக்கு பேய் தாக்கியுள்ளதாக கூறி, சகோதரிகளான LaBossiere மற்றும் Rachel Hilaire ஆகியோரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.

voodoo முறைப்படி பேய் ஓட்டுவதாக கூறிய அவர்கள் சிறுமியை ஊசி போன்ற ஆயுதத்தால் சித்திரவதை செய்துள்ளனர்.

மேலும் கயிறால் சிறுமியை பிணைத்து நெருப்பு மூட்டியுள்ளனர். இதனால் சிறுமியின் முகம் மற்றும் உடல் பாகங்கள் நெருப்பு பட்டு கருகியுள்ளது.

சிறுமி வலியால் அலறியும் அவர்கள் விடுவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தால் சிறுமியின் 8 வயது சகோதரனது தலையை துண்டிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த தகவலை சிறுவனே பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த சகோதரிகள் இருவரையும் கைது செய்துள்ள பொலிசார், சிறுமியின் தாயாரை கைது செய்யாமல் உளவியல் சிகிச்சைக்கு மட்டும் பரிந்துரைத்துள்ளனர்.

முகம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சிறுமியும் அவளது 8 வயது சகோதரனும் தற்போது பொலிஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமை குறித்த பெண்மணி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களுக்கு பிணை கிடைக்குமா என்பது தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*