;
Athirady Tamil News

27 வருடங்களின் பின்னர் அமைதியான தேர்தல்…!!

0

உள்ளுராட்சி மன்றதேர்தல் மொத்தத்தில் இம்முறை அமைதியாக இடம்பெற்றிருப்பதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்கள் முறைகோடாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது . வன்முறைகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மஞ்சுள கஜநாயக்க கருத்து தெரிவிக்கையில் 1991ஆம் ஆண்டிலிந்து 27 வருடங்களில் நடைபெற்ற 6 உள்ளுராட்சி மன்ற தேர்தலில்களில் மிகவும் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற்ற தேர்தல் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக அர்ப்பணித்த தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் சுயேட்சைகக்குழுக்களுக்கும் பொலிஸாருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அளிக்கப்படடட வாக்குகளை எண்ணும் பணி தற்பொழுது இடம்பெறுகின்றது.

இம்முறை வாக்குகளை எண்ணும் பணி வாக்களிப்பு மத்திய நிலையத்திலேயே இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வட்டார வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று அல்லது பலவற்றைக்கொண்ட அந்தந்த மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும். இருப்பினும் பாதுகாப்பு அல்லது அடிப்படை வசதிகள் தொடர்பிலான விடயங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தந்த உள்ளுராட்சி மன்ற முக்கிய வாக்களிப்பு மத்திய நிலைய பகுதியில் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்.

தபால்மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் வட்டார மத்திய நிலையத்தில் அல்லது வாக்களிப்பு மத்திய நிலையத்தில் எண்ணப்படும். தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50க்கு குறைவாயின் இவ்வாறான வாக்குகள் இரகசியத்தன்மை பாதுகாப்பதற்காக இந்த வாக்குகள் அந்த மத்திய நிலையத்தில் பொதுவான வாக்குகளுடன் கலக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*