;
Athirady Tamil News

அனைத்து தேர்தல் முடிவுகளும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடமுடியும்…!! (வீடியோ)

0

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் மத்தியில் அவர் உரையாற்றினார் .

ஒட்டுமொத்தமாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பு சுமார் 60சதவீதமாக காணப்பட்டதாகவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலின்போது பொதுமக்களும் அனைத்து கட்சிகளும் அமைதியை பாதுகாத்தமைக்காக ஆணைக்குழுவின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அமைதியான முறையில் வன்முறையற்று தேர்தல் நடைபெற்றதையிட்டு தான் பெருமைப்படுவதாகவும் அவர்; கூறினார்.

வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த அவர் மொத்த வாக்குப்பதிவு வீதம் மேலும் அதிகரிக்ககூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வாக்குகள் எண்ணும் பணியும் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் , பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறை வெளியிடுவார்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*