;
Athirady Tamil News

வவுனியா நகரசபை வட்டாரத்தின் இறுதி முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில்..!!

0

வவுனியா நகரசபை வட்டாரத்தின் இறுதி முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு இடங்களையும், ஐக்கியதேசியக் கட்சி நான்கு இடங்களையும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் வட்டார ரீதியான முடிவுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

20 அங்கத்தவர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் 10 வட்டாரங்களில் இருந்து 12பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 08 பேர் விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படுவர்.

இதன்படி வட்டார ரீதியில் தாண்டிக்குளம், வவுனியா நகரம், கோவில்புதுக்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குடியிருப்பு, இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதுடன், மூன்று முறிப்பு மற்றும் பட்டானிச்சூர் ஆகிய இரட்டை அங்கத்துவ வட்டாரங்கள் இரண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று 04 ஆசனங்களையும், வெளிக்குளம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*