;
Athirady Tamil News

முல்லைத்தீவில் 72,961 வாக்குகள் பதிவு…!! (வீடியோ)

0

முல்லைத்தீவில் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை 72,961 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ருபாவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தேர்தல்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நான்கு பிரதேச சபைகளுக்கான இந்த தேர்தலில் 134 வாக்கொடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இதன்போது 72,961 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதனடிப்படையில் 78 வீதமானோர் தங்களது வாக்குகளை வாக்களித்துள்ளனர்.

மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச சபைகளில் வாக்கு எண்ணும் பணிகள் முழுமையாக எண்ணப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு, கரைத்துறைபற்று பகுதிகளில் ஒருசில இடங்களை தவிர்த்து மற்றைய பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 12 =

*