;
Athirady Tamil News

பொலன்னறுவை கைவினைப்பொருள் விற்பனை நிலையதிற்கு ஜனாதிபதி விஜயம்…!! (படங்கள்)

0

பொலன்னறுவை, எத்துமல்பிட்டிய வீதியில் அமைந்துள்ள நிஷாந்த கைவினைப்பொருள் விற்பனை நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.

பாரம்பரியமாக பெற்றுக்கொண்ட கைவினைத்திறனுடன் புத்தாக்கத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து சிற்பக்கலையில் இந்த கைவினைப்பொருள் விற்பனை நிலையத்தை இன்று ஜனாதிபதி சென்று பார்வையிட்டார்.

அதன் உரிமையாளர் உள்ளிட்ட ஊழியர்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டவாறு சிறிது நேரம் அங்கு தங்கியிருந்த ஜனாதிபதி;, விற்பனை நிலையத்தையும் பார்வையிட்டார்.

பண்டைய கலாசாரத்தை வெளிக்காட்டும் வகையில் செதுக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் இந்த விற்பனை நிலையத்தில் காணப்படுவதனால், பெருமளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றனர். அவ்வாறு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகளுடனும் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதனிடையே பொலன்னறுவை நகரத்தில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் ‘ஹெல பொஜூன்’ பாரம்பரிய உணவகத்திற்கும் இன்று முற்பகல் ஜனாதிபதி விஜயம் செய்து, அதன் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ததுடன் அங்கு வருகை தந்திருந்த மக்களுடனும் கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 12 =

*