;
Athirady Tamil News

வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு..!!

0

தென்கொரியாவில் நேற்று தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்டோர் குழுவாக நேற்று சென்றிருந்தனர்.

தொடக்க விழா மேடையில் கிம் யோ ஜாங் வந்த போது, தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் கை குலுக்கி வரவேற்றார். பின்னர், தென்கொரியா அதிபரின் மாளிகையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தின்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் எழுதி இருந்த கடிதத்தை தென்கொரியா அதிபர் மூன் ஜே-விடம் கிம் யோ ஜாங் அளித்தார். தென்கொரியா-வடகொரியா இடையிலான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக அந்த கடிதத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டிருந்ததாக தென்கொரியா அதிபர் மாளிகை இன்று தெரிவித்துள்ளது.

மேலும், வடகொரியாவுக்கு வருமாறு அந்நாட்டின் அதிபர் சார்பில் அவரது தங்கை தென்கொரியா அதிபர் மூன் ஜே-வுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று தென்கொரியா அதிபர் வடகொரியாவுக்கு சென்றால் 10 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் முதன்முறையாக சந்திக்கும் பயணமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1950-ம் ஆண்டில் தென்கொரியா மீது வடகொரியா படை எடுத்தது. இந்த போர் சமாதானத்தில் முடிந்தது. அதன் பின்னர் இருநாடுகளும் தீராப்பகை கொண்ட நாடுகளாகவே இருந்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 2000 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் தென்கொரியா – வடகொரியா நாட்டின் அதிபர்கள் வடகொரியாவின் பியாங்யாங் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது கிம் ஜாங் உன்-னின் அழைப்பை ஏற்று தென்கொரியா அதிபர் வடகொரியாவுக்கு சென்றால் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்படலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 2 =

*