;
Athirady Tamil News

ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சர்பார்ஸ் அகமத் ராஜினாமா..!!

0

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சர்பார்ஸ் அகமத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இவர் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி முகமத் டஸ்லிமுதினின் மகன் ஆவார். டஸ்லிமுதின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார்.

அராரியா தொகுதியின் மந்திரியான டஸ்லிமுதின் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த காரணத்தால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், அக்மத் ராஜினாமா செய்திருப்பது இடைத்தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தான் என கூறுகின்றனர். மேலும் இவர் ராஷ்டிரிய ஜனதா கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ரப்ரி தேவியை இவர் நேரில் சந்தித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*