;
Athirady Tamil News

நாட்டின் இன்றைய முக்கிய ஊழல் ரபேல் போர் விமானம் கொள்முதல்தான் – ராகுல் காந்தி..!!

0

கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவாளர்களான லிங்காயத் இனத்தவர்கள் அதிகமாக வாழும் கர்நாடக மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை தொடர்ந்து 4 நாட்கள் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். சுரங்கங்கள் நிறைந்த பெல்லாரி, ராய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் ’ஜன ஆசீர்வாத்’ என்ற பெயரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

முதல்கட்டமாக, இன்று பிற்பகல் பல்லாரி மாவட்டத்துக்குட்பட்ட ஹோசபேட் பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மோடி செய்த ஒப்பந்தம்தான் நாட்டின் இன்றைய முக்கியமான ஊழல் என ராகுல் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியாது:-

இதற்கு முன்னர் ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படைக்கு கடந்த 70 ஆண்டுகளாக போர் விமானங்களை அளித்துவரும் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிட்டெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வந்தது.

பெங்களூரு நகரம் தனது சொந்தக் காலில் இன்று நிற்பதற்கு இந்த நிறுவனமும் ஒரு காரணம். ஆனால், ரபேல் போர் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை பெங்களூருவில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு சென்ற மோடி, அதை தனிப்பட்ட முறையில் தனது நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டார்.

மோடியை நாங்கள் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறோம். என்ன காரணத்துக்காக இந்த ஒப்பந்தத்தை உங்கள் நண்பருக்கு கொடுத்தீர்கள்? உங்கள் ஒப்பந்தத்தால் போர் விமானத்தின் விலை கூடியதா?, குறைந்ததா?

பாரீஸ் நகரில் இந்த திடீர் முடிவை நீங்கள் எடுத்தபோது நம் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கோவா நகரில் மீன் வாங்கி கொண்டிருந்தாரே.., அப்போது உங்கள் முடிவுக்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றீர்களா? இந்த கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் ஒருமணி நேரம் பேசிய மோடி ரபேல் விமான ஊழல் தொடர்பாக ஒருவார்த்தை கூட உதிர்க்கவில்லை.

கர்நாடகாவை முன்னர் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு ஊழலில் உலக சாதனை படைத்த நிலையில் ஊழலைப்பற்றி பேசிவரும் மோடி, இங்கு நடைபெற்றுவரும் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய எடியூரப்பாவை மீண்டும் முதல் மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தி தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*