;
Athirady Tamil News

பேச்சு மொழியாக சமஸ்கிருதம் – குஜராத் பல்கலைக்கழகத்தில் புதிய பாடதிட்டம் ஆரம்பம்…!!

0

இந்தியாவின் மிக பழமையான சமஸ்கிருதம் மொழி பேச்சுவழக்கில் இருந்து மறைந்து, வேதங்கள் மற்றும் மந்திர ஸ்லோகங்களில் வெறும் எழுத்துருவாக மட்டுமே இருந்துவருகிறது.

இந்நிலையில், சமஸ்கிருதம் மொழி முன்பு இருந்ததைப்போல் மக்களிடையே பேச்சு மொழியாகவும் புழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆறுமாத கால பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத் பல்கலைக்கழகம் தீர்மானித்தது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இதற்கான பாடத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்த பயிற்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அட்டுல் உனாகர், சமஸ்கிருதத்தை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் வாரந்தோறும் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் அடையலாம், இதற்கு சமஸ்கிருத மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பயிற்சி முடிந்து, ஆறுமாத காலத்துக்குள் அவர்கள் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசலாம் என்று குறிப்பிட்டார்.

இன்னும் பத்து நாட்களுக்குள் தொடங்கும் முதல்கட்ட குழுவில் சுமார் 30 மாணவர்கள் இருப்பார்கள். இந்த பயிற்சிக்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மொழியை பற்றி மேலும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காகவும், பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களை புரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் இலக்கணத்துடன் கூடிய சிறப்பு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 20 =

*