;
Athirady Tamil News

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும் -தேர்தல் ஆணையாளர்

0


அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன், பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறுகளை வெளியிடுவார்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமைக்கான காரணம்..

தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தந்த மத்திய நிலையங்கள் மற்றும் வட்டார வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து பெறுபேறுகள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமிருந்து தொலைநகல் மற்றும் தொலை பேசியினூடாக கிடைக்கப்பெற்றிருந்போதிலும் கையால் எடுத்துச்வரப்படும் பெறுபேறுகளை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு வட்டாரத்தின் பெறுபேறை அறிவிக்கும் போது தபால் மூல வாக்களிப்பு பெறுபேறை ஒன்றிணைத்து அறிவித்துள்ள போதிலும் சில இடங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மூலம் அவை அனுப்பப்பட்ட பெறுபேறுகளின் அறிக்கை இரண்டில் ஒன்று மாத்திரம் என்பதினால் மொத்த பெறுபேறுகளை தயாரிக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதினால் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களின் பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மேலும் குறிப்பிடத்தக்க நேரம் செல்லும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் வட்டார பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரியினால் தரவுக்கட்டமைப்பிற்குள் சேர்க்கும் வரையில் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த பெறுபேறையும் ஊடகத்திற்கு அறிவிப்பதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.

பெறுபேறுகள் வெளியிடும் வரையில் பொறுமையாக இருக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்ற தேர்தல் ஆணையாளர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − twelve =

*