;
Athirady Tamil News

4 ஆவது போட்டியில், இந்தியா அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா..!

0


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

4 ஆவது போட்டியில் இந்தியா அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா!

இந்தியா அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கடந்த 1 ஆம் திகதி முதல் விளையாடி வருகின்றது.

இதனடிப்படையில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியா அணி தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று ஆரம்பமான 4 ஆவது போட்டியில் ஜோகன்னஸ் பார்க் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு மழை காரணமாக டி.எல்.எஸ் முறையில் 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் இந்தியா அணியை வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணி சார்பில் 27 பந்துகளில் 43 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற கிலாஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + twenty =

*