குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் தென்கொரியாவில் நிலநடுக்கம்..!!

தென்கொரியாவின் பியோங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பியோங்சங் நகரில் இருந்து தெற்கு பகுதியில் 80 கி.மீ தொலைவில் இருக்கும் 4.7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மக்கள் பீதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பியோங்சங் நகரில் எவ்வித அதிர்வும் உணரப்படவில்லை என ஒலிம்பிக் அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.