மட்டக்களப்பில் “புளொட்” வியாளேந்திரன் எம்.பி தலைமையில் களமிறங்கியவர்கள் வெற்றி…!!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தலைமையிலான புளொட் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பல வட்டாரங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு களமிறங்கிய நால்வரில் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகரசபையில் களமிறங்கிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச சபையின் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோன்று ஏறாவூர்பற்றிட்கு 06 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் இருவர் வெற்றி பெற்றுள்ளதுடன்,
வவுணதீவில் 03 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இருவர் வெற்றி பெற்றுள்ளதுடன், வாகரையில் இருவர் நியமிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”