;
Athirady Tamil News

திருமணம் பற்றி விசாரித்த கர்ப்பிணி பெண்: இளைஞர் செய்த கொடூர செயல்..!!

0

இந்தோனேசியாவில் திருமணம் எப்போது என தொடர்ந்து விசாரித்து வந்த அண்டைவீட்டு பெண்மணியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் Kampung Pasir Jonge பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயதான Faiz Nurdin என்பவரே தமது அண்டை வீட்டாரான பெண்மணியை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தவர்.

பாதிக்கப்பட்ட பெண்மணி Nurdin-ஐ தொடர்ந்து நச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது. உன் வயது இளைஞர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெற்றுவிட்டனர், ஏன் நீ மட்டும் திருமணம் செய்துகொள்ள தாமதிக்கிறாய் என அவர் அடிக்கடி விசாரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று திடீரென்று குறித்த பெண்மணியின் குடியிருப்புக்கு சென்ற Nurdin அவரை தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மட்டுமின்றி அவரது குடியிருப்பில் இருந்து மொபைல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மாயமான நபரை பொலிசார் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். தற்போது குறித்த நபர் ஆயுள்தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 32 வயது பெண்மணி நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + nine =

*